Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்பவே முடியல... அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன ரைசா வில்சன்!

நம்பவே முடியல... அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன ரைசா வில்சன்!
, புதன், 18 நவம்பர் 2020 (17:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாவில் ப்ளாக் அண்ட் ஒயிட்  கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ரைசாவின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வித்யாசமாக உள்ளது. இதனை கண்ட ரசிகர் ஒருவர், " அட நிவேதா பெத்துராஜ் நீங்க எங்க இங்க? என குழப்பத்தில் கமெண்ட் அடித்துள்ளார். மேலும் சிலர் ரைசா, முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்டிருப்பதாக கூறிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்றுநோயால் பாதித்த நடிகருடன் பேசிய ரஜினி… குவியும் பண உதவி!