Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை தற்கொலையில் திடுக்கிடும் தகவல்கள் - அதிர்ந்து போன போலீசார்!

Advertiesment
நடிகை தற்கொலையில் திடுக்கிடும் தகவல்கள் - அதிர்ந்து போன போலீசார்!
, வியாழன், 29 நவம்பர் 2018 (13:06 IST)
இளம் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சினிமா வட்டாரத்தை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
நடிகை ரியாமிகாவின் சொந்த ஊர் ஈரோடு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் பெற்றோர் இறந்துவிட்டனர். அவருக்கு ஒரு தம்பியும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர்கள் சென்னையில் குடியிருந்துவருகின்றனர். இன்ஜினீயரிங் முடித்த நடிகை ரியாமிகாவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து பெயரும் புகழும் பெற வேண்டும் என்று சிறுவயதுமுதல் ஆசை. இதனால்தான் அவர் சினிமாவுக்குள் நுழைந்து கதாநாயகியாக நடித்தார். இதுவரை மூன்று படங்களில் அவர் நடித்துள்ளார். அவரின் தூரத்து உறவினராக பிரகாஷ், உதவி இயக்குநராக உள்ளார். தற்போது அவருக்கும் சரிவர வாய்ப்புகள் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவரை ரியாமிகா காதலித்துவந்துள்ளார். தினேஷ், ஜிம் மாஸ்டராக உள்ளார் போன்ற தகவல்கள் தெரியவந்தன.
 
ரியாமிகா ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்தவர். பின்னர் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் மூலம் பிரபலமானார். 
webdunia
 
இந்நிலையில் அவர் வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இதனை விசாரித்த போலீசார்,  தற்கொலைக்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று  கருதுகின்றனர். அதுதொடர்பாக அவருடன் தங்கியிருந்த பிரகாஷ், காதலன் தினேஷ் ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது.
 
நடிகை ரியாமிகாவும் அவருடை உறவினர்  பிரகாஷும் சென்னையில் குடியிருந்துவந்தனர். ரியாமிகா, தினேஷ் என்பவரை காதலித்துவந்துள்ளார். இந்த நிலையில், படவாய்ப்பே இல்லாததால் ரியாமிகா, சில மாதங்களாக மனவருத்தத்தில் இருந்துவந்துள்ளார். 
 
சம்பவத்தன்று இரவு, காதலன் தினேஷுக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். நேரமாகிவிட்டதால் காலையில் வருகிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார். அதன்பிறகு பிரகாஷுக்கும் ரியாமிகாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, தன்னுடைய அறைக்கு ரியாமிகா சென்றுவிட்டார். 
webdunia
 
காலையில் கண்விழித்த அவர் அறையிலிருந்து வெளியில் வந்துள்ளார். அதன்பிறகு மீண்டும் அறைக்குச் சென்று தூங்கிவிட்டார். அப்போது, தினேஷ் வீட்டுக்கு வந்துள்ளார். தினேஷும் பிரகாஷும் சேர்ந்து சாம்பார் வைத்து சைவ சமையல் செய்துள்ளனர். 
 
அதன்பிறகு சாப்பிடுவதற்காக ரியாமிகாவை எழுப்ப அறைக்குச் சென்றுள்ளனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால், பின்பக்க ஜன்னல் வழியாக அவர்கள் அறையை எட்டிப்பார்த்துள்ளனர். அப்போதுதான் ரியாமிகா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். 
 
உடனடியாக நாங்கள் சென்று ரியாமிகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், பிரேதப் பரிசோதனைக்காக அவரின் சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றனர். 
 
 
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது ,  ரியாமிகாவின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்துவருகிறோம். அதுதொடர்பாக பிரகாஷ், தினேஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது சில மாதங்களாக படவாய்ப்பு இல்லாமல் அவர் மனவேதனையில் இருந்ததாக தெரிவித்தனர்.
 
 மேலும், ரியாமிகாவின் அறையை சோதனை செய்தபோது அங்கு குறிப்பிடும் வகையில் எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் செல்போனில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துவருகிறோம். மேலும், அவர் கடைசியாக போனில் பேசியவர்களிடம் விசாரித்துவருகிறோம். இதற்கிடையில் ரியாமிகாவின் தம்பி பிரகாஷுக்கும் நிரந்தர வேலை இல்லை. இதனால் ரியாமிகாவின் தற்கொலைக்கு பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.
webdunia
 
மேலும், தற்கொலைக்கு முன் தினேஷ், ரியாமிகாவிடம் சரியாகப் பேசவில்லை. அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம். அதோடு தம்பி பிரகாஷும் ரியாமிகாவுடன் தகராறு செய்துள்ளார். இந்த மூன்று காரணங்களுக்காக நடிகை ரியாமிகா தற்கொலை செய்துகொண்டாரா என்று விசாரித்துவருகிறோம். இருப்பினும் விசாரணைக்குப்பிறகுதான் உண்மை என்னவென்று தெரியவரும்" என்றனர். 
 
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 எல்லாம் ஒரு படமா...? இப்படி செய்துவிட்டாரே ஷங்கர்!