திருவள்ளூரை சேர்ந்த காதல் ஜோடி பெற்றோர் சம்மதிக்காததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (23). இவரும் மோனிஷா (21) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவரது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதலர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். மிகுந்த மனவேதனையில் இருந்த அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.