Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்! - திரைத்துறையினர் அதிர்ச்சி!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (10:45 IST)

தமிழ் சினிமாவின் பழம்பெறும் நடிகரான நடிகர் ராஜேஷ் திடீரென காலமான செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் 70களில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் ராஜேஷ். 1974ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் அறிமுகமான நடிகர் ராஜேஷ், கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், தனிகாட்டு ராஜா, பயணங்கள் முடிவதில்லை, தாய் வீடு, சிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

 

முக்கிய ஹீரோவாக நடித்த இவர் 80களுக்கு பிறகு சிறையில் பூத்த சின்ன மலர், நல்ல காலம் பொறந்தாச்சு, உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரங்களையும் ஏற்றார், தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ள ராஜேஷ் ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

 

தற்போது 75 வயதாகும் ராஜேஷ் நடிப்பை விட்டு ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் காலை அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை, உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments