கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அவரது சிறுநீர்ப் பை வெற்றிகரமாக அகற்றப்பட்டு குடலில் இருந்து செயற்கையாக ஒரு சிறுநீர்ப்பை உருவாக்கப்பட்டு பொறுத்தப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருந்த சிவராஜ் குமார், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தன்னுடைய 131 ஆவது படத்தின் ஷூட்டிங்கில் அவர் தற்போது கலந்துகொண்டுள்ளார். அவருக்குப் படக்குழுவினர் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்துள்ளனர்.