முதல்ல ஹெல்மெட் போடுங்க தம்பி! – ரசிகருக்கு ஷாரூக்கான் அட்வைஸ்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (16:35 IST)
பைக்கில் பயணிப்பது போல புகைப்படம் எடுத்து பதிவிட்ட தனது ரசிகரை ஹெல்மெட் போட சொல்லி நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாரூக்கான். இந்தியாவிலேயே நடிகர்களில் ட்விட்டரில் அதிகம் ஃபாலாயொர்ஸ் கொண்டவராகவும் அறியப்படும் ஷாரூக்கானுக்கு இந்தியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்கள் பலர் ஷாரூக்கான் போல உடுத்திக் கொள்வது, ஹேர்ஸ்டைல் வைத்து கொள்வது என புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் ஷாரூக்கானுக்கும் ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்தில் பைக் ஒன்று வாங்கிய ஷாரூக்கான் ரசிகர் ஒருவர் பைக்கின் முகப்பில் ஷாரூக்கான் ஸ்டிக்கர் ஒட்டியிருக்க பைக்கில் செல்வது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். “என் பைக் பத்தி என்ன நினைக்கிறீங்க? நல்லா இருக்கா” என ஷாரூக்கானை டேக் செய்து கேட்டுள்ளார்.

அதற்கு ஷாரூக்கான் “ஹெல்மெட் மாட்டவும்” என பதிலளித்துள்ளார். தனது ரசிகருக்கு சரியான அறிவுரையை வழங்கியதாக ஷாரூக்கானை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 47 படத்தில் இணைந்த ‘லோகா’ ஹீரோ!

தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்… ஹீரோயின் இவரா?

பராசக்தி ‘முதல் சிங்கிள்’ பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments