Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாதத்தில் சாந்தணுவின் ராவணக்கோட்டம் படம்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:00 IST)
கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய 'மதயானைக்கூட்டம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மதயானைக் கூட்டம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் கழிந்த  நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். 

சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் இந்த படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தை மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments