மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பிறகு கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் கௌரவமான வசூலைப் பெற்று வருகிறது. மூன்று நாளில் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது படை தலைவன் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் லாபம் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கு மூலமாக 10 கோடி ரூபாயாவது ஈட்ட வேண்டும். ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதை மிகவும் சுமாராக இருந்ததால் அதன் பிறகு இந்த படத்தால் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை.
இந்நிலையில் படை தலைவன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு வெளியே டெண்ட்கொட்டா எனும் ஓடிடியில் விரைவில் படை தலைவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.