Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

vinoth
சனி, 14 ஜூன் 2025 (13:36 IST)
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.

படத்தைப் பற்றி படக்குழுவினர் “1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்.” என ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து படக்குழுவினருக்கு சண்முக பாண்டியன் புதுத்துணி எடுத்துக் கொடுத்து விருந்து ஒன்றையும் வைத்துள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

சண்முகபாண்டியனின் தந்தை விஜயகாந்த் சகப் படக்குழுவினரை இதுபோல விருந்து வைத்து உபசரிப்பதில் பேர் போனவர். இப்போது சண்முகபாண்டியனும் தந்தை வழியில் அதைப் பின்பற்ற தொடங்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments