Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

vinoth
சனி, 14 ஜூன் 2025 (13:30 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர்.

தற்போது அட்லி, அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படம் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லிக்கு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டத்தை அவர் இன்று பெற்றுக் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே அவர டாக்டர் அட்லி-னுதான் கூப்டணும்… கௌரவப்படுத்திய பல்கலைக்கழகம்!

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments