Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திக் சுப்பராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர்! டிவிட்டரில் நெகிழ்ச்சி!

கார்த்திக் சுப்பராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஷங்கர்! டிவிட்டரில் நெகிழ்ச்சி!
, சனி, 20 மார்ச் 2021 (13:43 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று பாராட்டியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இன்று தனது 38 வது பிறந்தநாள் தினத்தைத் கொண்டாடிவருகிறார். அவருக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். தமிழ் சினிமாவில் ஜிகிர்தண்டா, மெர்குரி, பீஸா, பேட்ட போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
webdunia

இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா உலகின் முன்னணி கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் இயக்குனர் ஷங்கர் ஒரு படி மேலே போய் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சீயான் 60 படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று நேரில் வாழ்த்தியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ள கார்த்திக் சுப்பராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் தொலைக்காட்சியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி… ப்ரோமோ வெளியீடு!