Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் எகிறிய வேள்பாரி பட்ஜெட்… ஷங்கர் போடும் மாஸ்டர் ப்ளான்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (16:13 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதலில் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்பட்ட இந்த படம் இப்போது ஒவ்வொரு பாகமும் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் பாரியாக நடிக்க சூர்யா, யாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது ரண்வீர் சிங்கை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இயக்குனர் ஷங்கரின் இந்த திடீர் முடிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு: பிரபல யூடியூபர் மீது வழக்குப் பதிவு!

என்னுடைய புகைப்படத்தை காட்டினால் ஏமாந்துவிடாதீர்கள்.. நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு..!

அடியாத்தி நான் இப்ப ஃபெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் க்யூட் போட்டோஸ்!

ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

ரஜினி சாருக்கு நான் துருவ நட்சத்திரம் கதையைதான் சொன்னேன்… கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments