தெலுங்கு படத்துக்குப் பின் பாலிவுட் படம்… தமிழ் சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறாரா சங்கர்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:40 IST)
இயக்குனர் ஷங்கர் அடுத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க வுள்ளார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் ராம் சரண் படத்தை இயக்கி முடித்துவிட்டு ஷங்கர் அங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு நேரடியாக ரண்வீர் சிங்கைக் கதாநாயகனாக வைத்து ஒரு பாலிவுட் படத்தை இயக்க உள்ளாராம். இப்போதைக்கு அவர் இயக்கத்தில் தமிழ்ப் படம் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 9 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments