Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு ரசிகர்களுக்காக கேம்சேஞ்சர் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை… ஷங்கர் ஓபன் டாக்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:23 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு தெலுங்கு மசாலா படமாக உருவாகியுள்ளது என்பது டிரைலரைப் பார்த்தாலே தெரிகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள ஷங்கர் “என்னுடைய எல்லாப் படங்களும் தெலுங்கிலும் டப் ஆகி வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் கேம்சேஞ்சர் படத்துக்காக நான் தெலுங்கு ரசிகர்களுக்காக பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாரா மாதிரி PAN இந்தியா படம் பண்ணப் போறேன் –விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!

அப்பா வேற சொன்னதுக்காக ட்ரோல் பண்ணாங்க… ஆனா நான் ஃபீல் பண்ணல – சூர்யா விஜய்சேதுபதி பதில்!

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments