Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:06 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில மாதங்கள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  தற்போது ஷூட்டிங் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள்  சூழ்ந்து பலக் கேள்விகளை எழுப்பினர். அப்போது ரஜினிகாந்த் “என்னிடம் அரசியல் கேள்வி கேட்கவேண்டாம் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்” எனக் கொஞ்சம் கடுமையாகப் பேசினார். பின்னர் “கூலி படத்தின் 70 சதவீத வேலைகள் நிறைவடைந்துள்ளன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments