Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்கும் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்… முதல் படம் இதுதான்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்கும் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்… முதல் படம் இதுதான்!
, திங்கள், 19 டிசம்பர் 2022 (09:07 IST)
இயக்குனர் வசந்தபாலன் அங்காடித் தெரு மற்றும் வெயில் போன்ற தரமான படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய அரவான், காவியத்தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்கள் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. சில ஆண்டுகளாக பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அநீதி படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டே நாளில் உலகம் முழுவதும் 3600 கோடி ரூபாய் வசூலித்த அவதார் 2!