Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதான் ஷங்கர் ராம்சரண் படத்தின் தலைப்பா? இணையத்தில் பரவும் தகவல்!

இதுதான் ஷங்கர் ராம்சரண் படத்தின் தலைப்பா? இணையத்தில் பரவும் தகவல்!
, வியாழன், 9 மார்ச் 2023 (14:52 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு ‘CEO’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!