Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட்டைக் கொட்டும் கமல்… 100 கோடியில் உருவாகும் சிம்புவின் முதல் படம்!

பட்ஜெட்டைக் கொட்டும் கமல்… 100 கோடியில் உருவாகும் சிம்புவின் முதல் படம்!
, வியாழன், 9 மார்ச் 2023 (09:26 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமான இது சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது.

இந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க கமல் மற்றும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரரான மகேந்திரன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்துக்காக சிம்புவும் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கௌதம் மேனனால் லியோ படத்துக்கு வந்த சிக்கல்…தயரிப்பாளர் லலித் குமார் எடுத்த முடிவு!