இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் ஹீரோ ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது கேம்சேஞ்சர் படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட அவர் வேள்பாரி பற்றி பேசியுள்ளார். அதில் “வேள்பாரி படத்துக்கான திரைக்கதை தயாராக உள்ளது. படத்தில் நடிக்க நல்ல உடல்வாகு உள்ள ஆட்கள் தேவை. யாராவது நல்ல பாடிபில்ட் லுக்கில் பார்த்தால் அவர்கள் புகைப்படங்களை எல்லாம் ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.