Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

vinoth
புதன், 25 டிசம்பர் 2024 (16:01 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் படங்களின் பாடல்கள் ஒரு காலத்தில் வெகுவாக ரசிக்கப்பட்டன. ஆனால் இப்போது பாடல்களை ரசிகர்கள் பெரிதாக விரும்புவதில்லை என்பதுதான் எதார்த்தம். அப்படி இருந்தும் இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments