இந்தியன் 2 விபத்து குறித்து இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் மத்திய குற்றப்பரிவினர் முன்னிலையில் விசாரணை நடைப்பெற்றது.
சமீபத்தில் ’இந்தியன் 2 ’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்து மூன்று உயிர்கள் பலியான விவகாரம் குறித்து தன்னை விசாரணை செய்து முடித்த பின்னரும் சம்பவத்தை நடித்து காட்டும்படி காவல்துறையினர் துன்புறுத் வருகின்றனர் என நடிகர் கமல்ஹாசன் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, இந்தியன் 2 பட விபத்து சம்பந்தமாக கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்த கையோடு இயக்குநர் ஷங்கர் மற்றும் மேலும் சிலருக்கு நேரில் அஜராக சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் மத்திய குற்றப்பரிவினர் முன்னிலையில் விசாரணை நடைப்பெற்றது. அப்போது விபத்து எப்படி நடந்தது என நேரில் ஆஜரான அனைவரும் நடித்து காட்டி விளக்கம் அளித்தனர்.
இது வீடியோ ஆதாரமாக பதிவு செய்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இதை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மத்திய குற்றப்பரிவினர் மேற்கொள்ளுவர் என தெரிகிறது.