Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (16:10 IST)
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம்,  இஷக், கும்பளங்கி ஆகிய மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெளியான ஆர் டி எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஷேன் நிகம் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். மெட்ராஸ்காரன் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்குகிறார். படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். கதாநாயகியாக நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹாரிகா நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக இந்த படம் காத்திருந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியதால் பல சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் பொங்கல் ரிலீஸில் இணைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments