Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் இருப்பது அவமானம்- பிரபல நடிகை

Advertiesment
பாஜகவில் இருப்பது அவமானம்- பிரபல நடிகை
, வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (21:13 IST)
பிரபல நடிகை ரூபா. இவர், பாஜவில் அவமானம் தாங்க முடியாமல் அக்கட்சிடில் யில் இருந்து விலகுவதாகட் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ரூபா பட்டாச்சார்யா. இவர்,  பாஜக கட்சியில் இணைந்து நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்களுக்கானப் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: பாஜக சட்டமன்றத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் நான் விலகவில்லை. அக்கட்சியினரால் நான் சந்தித்த அவமானங்களால் கட்சியில் இருந்து விலகுகிறேன்.பாஜ்க பொதுச்செயலாளர் சயந்தன் என்னைக் கடுமையாகத் திட்டினார். அதுவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது எனத் தெரிவித்துள்ளார்.

 இது அரசியல்வட்டாரத்திலும் மேற்கு வங்கத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இனிமேல் தான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை எனவும், ஒரு சமூக ஆர்வலராக தொடர்ந்து மக்களுக்கு சேவை ஆற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சம்பளம் உண்மையிலேயே ரூ.120 கோடியா?