உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.
இது கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் வங்கதேச அணியினரை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கும் படி உருவாகியுள்ளது. இந்நிலையில் மேத்யூஸ் விக்கெட்டுக்கு விண்ணப்பித்தது குறித்து ஷகீப் அல் ஹசன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “எங்கள் அணியின் பீல்டர் ஒருவர்தான் இந்த விதி பற்றி கூறினார். நான் இது சம்மந்தமாக நடுவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேனா எனக் கேட்டனர். நான் எடுத்த முடிவு சரியா தவறா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. நான் எடுத்த முடிவு விதிகளில் உள்ளது. அணியின் வெற்றிக்காக இதை நான் செய்தேன். அந்த வாய்ப்பினை பயன்படுத்தியதில் எனக்கு எந்த கவலையும் இல்லை” எனக் கூறியுள்ளார்.