Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (07:58 IST)
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் தான் பட்ட அவமானத்தைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “என் அக்கா மகனின் திருமணத்துக்கு நான் சென்றிருந்தேன். ஆனால் நான் வந்தால் மேடையில் இருக்க மாட்டேன் என்று அந்த மணப்பெண் கீழே இறங்கிவிட்டார். நான் அவர் பாத்ரூம் சென்றிருப்பதாக நினைத்தேன். நான் கீழே சென்ற பின்னர்தான் அவர் மேடைக்கு வந்தார். நான் மீண்டும் மேடைக்கு சென்று பரிசை அளித்த போது என் அக்கா மகன் என் முகத்தைக் கூடப் பார்க்காமல் அதை வாங்கிக் கொண்டான். அவனுடைய மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கூட வைக்கவில்லை. அவனை நான்தான் படிக்கவைத்தேன். இதனால் எனக்கு மண மேடையிலேயே அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்