Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சு மிட்டாய் மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

vinoth
திங்கள், 7 ஏப்ரல் 2025 (07:48 IST)
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ இம்மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அந்த டிரைலரில் அஜித்தின் அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை நினைவூட்டும் வசனம் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்றாலும், அஜித் ரசிகர் அல்லாதவர்களுக்கு கனெக்ட் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை 50 லட்சம் பேரால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்த டிரைலரில் 90 களில் வெளியான ஹிட் பாடலான ‘ஒத்த ரூபாயும் தாரேன்..” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த பாடல் மட்டும் இல்லாமல் படத்தில் எதிரும் புதிரும் என்ற படத்தில் சிம்ரன் நடனமாடிய ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அந்த பாடலில் அர்ஜுன் தாஸும், பிரியா பிரகாஷ் வாரியரும் இணைந்து நடனமாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments