Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரவன்கள் உடை மாற்றுவதற்கு மட்டுமில்லை... ஷகீலா அளித்த பதில்!

Advertiesment
கேரவன்கள் உடை மாற்றுவதற்கு மட்டுமில்லை... ஷகீலா அளித்த பதில்!

vinoth

, வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (09:58 IST)
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமாவில் தற்போது பற்றி எரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்.

அதில் “நான் சினிமாவில் அறிமுகம் ஆனபோது பெண்களுக்கு உடைமாற்ற சரியான வசதிகள் இருக்காது. அதனால் துணியால் மறைத்துக் கொண்டு மாற்றுவோம். அப்போது எங்கள் அருகில் ஆண்கள் எல்லாம் சுற்றி நிற்பார்கள். ஆனால் அதன் பிறகு கேரவன் வசதி வந்தது. ஆனால் கேரவன் அதற்கு மட்டும் பயன்படவில்லை. அதில் சில மோசமானவைகளும் நடந்துள்ளது. அதை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் பலர் சொல்லி இருக்கிறார்கள். கேரள சினிமாவில் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் முகேஷ் என்ற அதிகார மையம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு முக்கியமான வேல ஏதோ இருக்கு போல… கோட் படத்தில் சிவகார்த்திகேயன் சீனில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?