"இப்படி ஒரு நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை" - திக்குமுக்காடிப்போன விஜய்சேதுபதி!

சனி, 10 ஆகஸ்ட் 2019 (15:21 IST)
இந்திய சினிமாவின் உச்ச நடிகரான ஷாருக்கான் நடிகர் விஜய் சேதுபதியை வெகுவாக பாராட்டி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 


 
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தரமான படங்ககளில் நடித்து தொடர் வெற்றிகளை படைத்தது வருகின்றார். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார் விஜய் சேதுபதி. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியா மெல்போன் நகரில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனர்  இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவும், விஜய் சேதுபதியும் கலந்துகொள்ள உடன் பாலிவுட் நடிகர்க ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 


 
அப்போது அந்த விழாவில்  சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக  விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் "விஜய் சேதுபதியை போல ஒரு சிறந்த நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை" என நடிகர் ஷாருக்கான் மனம் திறந்து வெளிப்படையாக பாராட்டியுள்ளார். அந்த ஒரு கணம் விஜய் சேதுபதி மெய்மறந்து இன்பத்தில் திகழ்ந்துவிட்டாராம்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இது பிரெண்ட்ஷிப்பா...? முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்!