Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்சேதுபதியின் அரசியல் படத்தில் பார்த்திபன்: களைகட்டும் கூட்டணி என தகவல்

Advertiesment
விஜய்சேதுபதியின் அரசியல் படத்தில் பார்த்திபன்: களைகட்டும் கூட்டணி என தகவல்
, வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:44 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அவற்றில்  'கடைசி விவசாயி, சங்கத் தமிழன் , லாபம், சயிர நரசிம்ம ரெட்டி, மாமனிதன் போன்ற ஒருசில படங்கள் அடங்கும். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் சேதுபதி தற்போது 'துக்ளக் தர்பார்' என்ற அரசியல் நையாண்டி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
 
இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளார். ஏற்கனவே இவர் நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தவர் என்பதும் அந்த படத்தில் இருவரது காட்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது அதிலும் ஒரு அரசியல் நையாண்டி படத்தில் இணையவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
'96' படத்தில் அருமையாக இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது அதுல்ல? ஒரே மாதிரியா இரண்டு படமா? குழப்பத்தில் ரசிகர்கள்