மீண்டும் மோதும் பிரபாஸ் & ஷாருக் கான்… ஒரே நாளில் ரிலீஸாகும் கிங் &பவுஜி!

vinoth
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (08:37 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மிகச்சிறப்பானதாக அமைந்தது. அந்த ஆண்டில் அவர் நடித்த பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ஹிட்டாகின. இவ்வாறு ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் அடுத்து ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்க ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிக்க உள்ளார்.  அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால் இந்த ஆண்டு ரிலீஸாக இருந்த ‘கிங்’ படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே நாளில் பிரபாஸ் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கும் ‘பவுஜி’ திரைப்படமும் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு சலார் படமும் டன்கி படமும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டு படங்களும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் மோதும் பிரபாஸ் & ஷாருக் கான்… ஒரே நாளில் ரிலீஸாகும் கிங் &பவுஜி!

கார்த்தி தன்னை ஒரு நடிகராகப் பார்ப்பதில்லை… இயக்குனர் நலன் குமாரசாமி பாராட்டு!

சிவப்பு நிற உடையில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வித்தியாசமான உடையில் அசத்தல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ரிலீஸ் தாமதத்தால் கடுப்பான சூர்யா ரசிகர்கள்… தீபாவளிக்கு வரும் ‘கருப்பு’ சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments