Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் கான் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?

ஷாருக் கான் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?

vinoth

, புதன், 17 ஜனவரி 2024 (14:06 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள ஷாருக் கான் அடுத்து பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக்கில் மதுப்பிரியர்களை அடித்து விரட்டிய விஷால்! – நடந்து என்ன?