Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த முறை விமானத்தின் மேல் ஆடத் தயாராக இருக்கிறேன்… மணிரத்னத்திடம் ஷாருக் கான் கோரிக்கை!

இந்த முறை விமானத்தின் மேல் ஆடத் தயாராக இருக்கிறேன்… மணிரத்னத்திடம் ஷாருக் கான் கோரிக்கை!

vinoth

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:08 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மற்ற இரு படங்களை போல மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தோல்விப்படமாகவும் அமையவில்லை.

இந்நிலையில் ஷாருக் கான் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் எப்போது நடிக்கப் போகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நான் எப்போதும் அவரிடம் கேட்பது இதுதான். இப்போது வெளிப்படையாகக் கேட்கிறேன். அடுத்த முறை நீங்கள் விமானத்தின் மேல் ஆட சொன்னாலும் நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அவருக்கு பதிலளித்த மணிரத்னம் “நீங்கள் சொந்தமாக விமானம் வாங்கும் போது அது நடக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு பதிலளித்த ஷாருக் கான் “என்னுடைய சமீபத்தைய வெற்றிகளை வைத்து பார்க்கும் போது விமானம் வாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயலான் படத்துக்காக மீண்டும் கடன் வாங்கிய சிவகார்த்திகேயன்!