Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜவான் தமிழ்நாடு திரையரங்க உரிமை இத்தனை கோடியா?

ஜவான் தமிழ்நாடு திரையரங்க உரிமை இத்தனை கோடியா?
, சனி, 19 ஆகஸ்ட் 2023 (09:05 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் படங்களிலேயே அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்கப்பட்ட படமாக ஜவான் அமைந்துள்ளது.

ஜவான் திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக ஐந்து மொழிகளில் ரிலீஸாகும் இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டில் ஜாலி பண்ணும் ஆண்ட்ரியா.. லேட்டஸ்ட் போட்டோஸ்!