பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் பதான் படத்தின் ப்ரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் ஜவான் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான்.
இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.