Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்துக்காக சென்னையின் பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (08:53 IST)
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் கமல்ஹாசன் இன்னும் கலந்துகொள்ளவில்லை.

கடந்த மாத இறுதியில் தொடங்கிய ஷூட்டிங் ஒரு வாரம் நடந்தது. அதன் பின்னர் இப்போது இயக்குனர் ஷங்கர் தன்னுடைய தெலுங்கு பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் இந்தியன் 2 அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னையின் பிரபல ஸ்டியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமான காட்சிகள் அனைத்தும் இதில்தான் அடுத்து படமாக்கப் பட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments