Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

indian 2 redgiant
, புதன், 31 ஆகஸ்ட் 2022 (19:10 IST)
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தின் போஸ்டரை ரிலீஸ் செய்து உறுதி செய்தது.

.இந்நிலையில் நடிகர் விவேக் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில், அவருக்குப் பதில் குரு சோமசுந்தரம் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், இந்தியன் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு சில  மாதங்களுக்கு முன் காலமானார். அவர் கதாப்பாத்திரத்தில் நடிக்க  நந்து பொதுவால் நடிக்கவுள்ளார்.
webdunia

சமீபத்தில் ராகுல் பிரீத்சிங் இப்படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதியின்''ரெட் ஜெயிண்ட் மூவிஸ்'' ஒரு முக்கிய அறிவிப்பு!