அடுத்த ஆண்டுதான்…. தயாரிப்பாளரைக் கைவிரித்த சிவகார்த்திகேயன்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (08:47 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 5 க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகி விட்டன. ஆனால் அயலான் நிலை என்னவென்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான RD ராஜா தயாரித்தார். பின்னர் அவரிடம் இருந்து கே ஜே ஆர் நிறுவனம் கைப்பற்றி தயாரித்தது.

கடந்த ஆண்டு ஷூட்டிங் முடிந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது அந்த பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இப்போது வரை உறுதியாகவில்லை என்றே சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் – தயாரிப்பாளர் சந்திப்பு நடந்ததாகவும் அப்போது இந்த படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

தொடர் சர்ச்சையாகும் பேச்சு.. தேவயானியின் கணவருக்கு என்ன ஆச்சு?

மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கும் பிரபுதேவா… ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments