சென்டிமெண்ட்... ரெமோவில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதிவ்யா
சென்டிமெண்ட்... ரெமோவில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதிவ்யா
சிவகார்த்திகேயனை ஸ்டாராக்கிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அவரால் ஆக்ஷனிலும் சோபிக்க முடியும் என்பதை வெற்றியுடன் நிரூபித்தது, காக்கி சட்டை.
இந்த இரண்டிலும் நாயகி ஸ்ரீதிவ்யா. ஸ்ரீதிவ்யா இருந்தால் படம் நிச்சயம் வெற்றி என்று சிவகார்த்திகேயனுக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு நம்பிக்கை.
விவேக் சொன்னது போல், ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸ் இருந்தாலும், ஒரு எலுமிச்சை பழத்தை லாரிக்கு முன்னால் தொங்கவிடுவதில்லையா? அதேபோல் பல உலகத்தரம் வாய்ந்த டெக்னிஷியன்கள் இருந்தாலும் ரெமோ படத்தில் எலுமிச்சை பழமாக ஸ்ரீதிவ்யாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
கௌரவ வேடம்தான், ஆனால், அவர் இருந்தால்தான் வெற்றிக்கு ஒரு கியாரண்டி என சேர்த்திருக்கிறார்கள்.