Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிமாறன் படத்திலிருந்து சமந்தா விலகுகிறார்...?

வெற்றிமாறன் படத்திலிருந்து சமந்தா விலகுகிறார்...?

Advertiesment
வெற்றிமாறன் படத்திலிருந்து சமந்தா விலகுகிறார்...?
, வெள்ளி, 1 ஜூலை 2016 (11:12 IST)
வெற்றிமாறனின் வடசென்னை படத்திலிருந்து சமந்தா விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


 
 
வடசென்னை படத்தில் குடிசைவாழ் பெண்ணாக சமந்தா நடிக்க உள்ளார். அதற்காக குடிசைப் பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கையை பலநாள்கள் அருகிலிருந்து கவனித்து வந்தார். வடசென்னையில் நடிப்பதை அவரும் உறுதி செய்திருந்தார்.
 
சமந்தா - நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடக்கவிருப்பதால் சமந்தா வடசென்னையில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வடசென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒரு பாகம் என்றால் நடித்து முடித்துவிடலாம். மூன்று பாகங்கள் என்பதால் சமந்தா யோசிப்பதாக கூறுகின்றனர்.
 
ஆனால், வெற்றிமாறனோ, சமந்தாவோ இது குறித்து இன்னும் கருத்து எதுவும் கூறவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி டிக்கெட்கள்... அரசே இலவசமாக வழங்கும் வினோதம்