Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெறுப்பு என்பது என்னன்னா?... செல்வராகவன் உதிர்த்த முத்து!

Advertiesment
வெறுப்பு என்பது என்னன்னா?... செல்வராகவன் உதிர்த்த முத்து!
, புதன், 15 மார்ச் 2023 (08:06 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குபாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படம் ரிலீஸாகி கணிசமான கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் செல்வராகவன் டிவிட்டரில் அடிக்கடி தனது அனுபவப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது “வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு ! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் அதை விற்கலாமா? எவ்வளவு கிடைக்கும்?