Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோகன் ஜி –ஆ அது யாரு… பகாசூரன் பற்றிய கேள்விக்கு திருமா வளவன் பதில்!

Advertiesment
மோகன் ஜி –ஆ அது யாரு… பகாசூரன் பற்றிய கேள்விக்கு திருமா வளவன் பதில்!
, புதன், 8 மார்ச் 2023 (15:32 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. ஒரு சிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முற்போக்காளர்கள், இடதுசாரிகள் மற்றும் தலித்திய சிந்தனை உள்ளவர்கள் இந்த படம் பிற்போக்குத்தனமான கருத்துகளை விதைக்கிறது எனக் கூறி விமர்சித்தனர். விமர்சனங்கள் பற்றி பேசிய இயக்குனர் “இந்தபட்ம் எல்லோருக்கும் பிடிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மட்டும் பிடிக்கவில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரும்பன் என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக திருமா வளவன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இயக்குனர் மோகன் கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்ட போது “மோகன் ஜி-னு  ஒருத்தர் படம் எடுத்துட்டு இருக்காருங்குறதே எனக்கு தெரியாது. நீங்க சொல்லிதான் தெரியும். அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பணம் கையில் வந்தால்தான்… தத்துவம் இல்லை அனுபவம்” – இயக்குனர் செல்வராகவனின் இன்றைய ட்வீட்!