Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் & ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடக்கம்!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (12:31 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இந்நிலையில் இப்போது 7ஜி ரெயின்போ காலணி 2 படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக தடைபட்டு நிற்பதால் தற்போது ஜி வி பிரகாஷைக் கதாநாயகனாக்கி ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!

ரஜினியின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்!

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments