Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயன் படத்தில் நான் வெறும் நடிகர் மட்டுமே… செல்வராகவன் பதில்!

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2024 (10:12 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் 2006 ஆம் ஆண்டு அஜித், தனுஷ், பரத் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்க இருந்த ‘காசிமேடு’ கதையைதான் தற்போதைய காலத்துக்கு ஏற்றபடி மாற்றி ’ராயன்’ ஆக தனுஷ் இயக்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதை செல்வராகவன் மறுத்துள்ளார். அதில் “ராயன் படத்தின் கதையை நான் எழுதவில்லை. இது தனுஷின் கனவுப்படம். இந்த படத்தில் நான் நடிகராக மட்டுமே பணியாற்றி இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றி பிரபல ஓடிடி நிறுவனம்.. இத்தனை கோடி வியாபாரமா?

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு எப்போது?.. வெளியான தகவல்!

இட்லி கடை தள்ளிப் போனது ஏன்?... நடிகர் அருண் விஜய் கொடுத்த பதில்!

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் இவர்தான்.. வெளியான தகவல்!

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments