Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷை இயக்கும் சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குனர்?

தனுஷை இயக்கும் சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குனர்?

vinoth

, புதன், 21 பிப்ரவரி 2024 (08:18 IST)
தனுஷ் நடிப்பில் வெளியாகும் சமீபகால படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி  வருகின்றன. சமீபத்தில் ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் திரைப்படம் வசூலில் சுணங்கினாலும் விமர்சன ரீதியாக பரவலான கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் தன்னுடைய 50 ஆவது படமான ‘ராயன்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதையடுத்து சேகர் கமுலா படம் மற்றும் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தி படம் என நடிக்கும் தனுஷ், அடுத்து சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை மதுரை அன்பு செழியன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய ஓடிடி நிறுவனத்தை ஆரம்பிக்கும் மதுரை அன்புச் செழியன்?