Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று வெளியாகிறது தனுஷ் 50 படத்தின் முதல் லுக் போஸ்டர்!

இன்று வெளியாகிறது தனுஷ் 50 படத்தின் முதல் லுக் போஸ்டர்!

vinoth

, திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:06 IST)
தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் தலைப்பாக ‘ராயன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தேர்தல் காரணமாக தேதி மாற்றி வைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஆகும் யுட்யூப் பிரபலம் அபிஷேக் ராஜா!