நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து உருவாகியிருக்கும் சமூக நோக்கு படமான “தவம்” வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தை மையப்படுத்தி சமூக நோக்கத்தோடு உருவாகியுள்ள படம் தவம். விஜய் ஆனந்த் மற்றும் சூரியன் ஆகிய புதுமுக இயக்குனர்கள் இயக்கியுள்ள இந்த படத்தில் வசி மற்றும் பூஜாஸ்ரீ ஆகியோர் நடிக-நடிகையாக அறிமுகம் ஆகின்றனர்.
இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களிலும் சீமான் பணியாற்றியுள்ளார்.
தவம் படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படம் பிடித்திருந்தாலும் அதை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.
நல்ல படமாக இருந்தாலும் சீமான் அரசியல் களத்தில் பலரை விமர்சித்தவர். அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படலாம். அப்படியே மீறி வெளியிட்டாலும் பெரிய கட்சிகளை விரோதப்படுத்தி கொள்ள வேண்டியது வருமோ என அவர்கள் சிந்திப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இப்படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.