Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், சிம்பு ரெண்டு பேருமே என் தம்பிங்க… அன்பானவங்க – சீமான் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:47 IST)
நடிகர்கள் சிம்பு மற்றும் விஜய் ஆகிய இருவருமே தனது தம்பிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாக உள்ளது . ஆனால் மாஸ்டர் படத்துக்குள்ள எதிர்பார்ப்பு ஈஸவரன் படத்துக்கு இல்லை. இதனால் மாஸ்டர் மட்டும் பொங்கலுக்கு ரிலீஸாகட்டும் ஈஸவர்ன் பின்னர் வெளியாகட்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் மாஸ்டர் படம் மட்டும் வரவேண்டும் என்று ஈஸ்வரன் படத்தை ரிலீஸாக விடாமல் சிலர் தடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்துள்ளார்.

இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘இரண்டு பேருமே என் தம்பிகள். இரண்டு பேருடைய படங்களுமே வரணும்னுதான் நான் நினைப்பேன். மாஸ்டர் படத்தின் விநியோகஸ்தர்கள் அப்படி நினைத்தாலும் விஜய் அப்படி நினைக்க மாட்டார். விஜய், சிம்பு இரண்டுபேருமே  என்னைப் போல அன்பாகத்தான் இருப்பாங்க. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கு 10 -15 படங்கள் வெளிவரும். அந்த முறையை ஏன் ஒழிச்சுட்டாங்கன்னு தெரில. இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்று அல்லது இரண்டுதான் வருகிறது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது திருமணம் நடந்த சில நாட்களில் முதல் மனைவியோடு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்!

கேப்டன் இருந்திருந்தால் ரஜினிகாந்துக்குப் பாராட்டு விழா நடத்தியிருப்பார் – பிரேமலதா வேண்டுகோள்!

கூலி படத்துக்குத் தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சி எத்தனை மணிக்கு? வெளியான தகவல்!

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

சிம்புவின் 3 மாத கால்ஷீட்டை வேஸ்ட் செய்தாரா வெற்றிமாறன்.. அடுத்த படம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments