ஸ்கேம்ஸ்டர் … புலம்பித் தள்ளும் ரசிகர்கள்… உடைந்ததா லோகேஷ் bubble…?

vinoth
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (11:17 IST)
தமிழ் சினிமாவில் ஒரு  வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். முன்னணி நடிகர்கள் இல்லாமல் திரைக்கதையின் பலத்தால் உருவாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் லோகேஷின் சினிமா கிராஃப் ஏற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளது.  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அந்த படம் நேற்று ரிலீஸாகிக் கலவையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

படத்தை மிகவும் எதிர்பார்த்து சென்றிருந்த ரசிகர்கள் படம் பிடிக்காமல் லோகேஷ் கனகராஜைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் லோகேஷை ஸ்கேம்ஸ்டர் இயக்குனர் என்றும் விமர்ச்சிக்கத் தொடங்கியுள்ளனர். மாநகரம், கைதி என தனது ஆரம்பகாலத்தில் விறுவிறுப்பான படங்களாகக் கொடுத்த லோகேஷ் மாஸ் ஹீரோக்களுடன் இணைந்த பிறகு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிகர்களுக்கு பில்டப் கொடுக்கும் மசாலாக் கதைகளாக எடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும், ஆனால் அதையும் கூட வரவர ஒழுங்காக செய்வதில்லை என்றும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு பிரதீப் ரங்கநாதன் தந்த பதில்..!

கால் உடைந்த கானா வினோத்! தள்ளி விட்டது யார்? பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகராக அறிமுகமாகும் இன்பநிதி! முதல் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்! - வெளியான அப்டேட்!

தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு வழிவிடாத காந்தாரா 1… 100 தியேட்டர்களில் தொடரும் காட்சிகள்!

எட் ஷீரனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்… எதிர்பார்ப்பை எகிறவைத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments