ரஜினிக்கு எஸ்.பி.பி பாடிய மாஸான ஓபனிங் பாடல்

Webdunia
சனி, 15 மே 2021 (22:33 IST)
ரஜினியின் அண்ணாத்த படத்தில் வரும் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளதாகவும் அது மாஸாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், படையப்பா, பாட்ஷா, அண்ணாமலை, சந்திரமுகி போன்ற படத்தில் ரஜினிக்கு ஓபனிங் சாங் வருவதைப் போல் அண்ணாத்த படத்தில் ஒரு ஓபனிங் பாடல் இருக்கிறதாம். இப்பாடலை வழக்கம் போல் எஸ்.பி.பி. பாடியுள்ளதாகவும்,( கடந்தாண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது)  இதற்கு இசையமைப்பாளர் டி.இமான்  சூப்பராக இசையமைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறதாம். எஸ்.பி.பி, சித் ஸ்ரீராம், போன்ற பாடகர்களும் பாடியுள்ளதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments