Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜுன் படத்தில் நடிக்கும் சத்யராஜ்… நண்பருக்காகக் கொடுத்த சலுகை!

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (09:58 IST)
நடிகர் அர்ஜுன் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் மிக முக்கியமான நடிகராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார்.

ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி  நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளாராம் அர்ஜுன். படத்தில் சத்யராஜ், கதாநாயகியின் அப்பா வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்க சத்யராஜ் தான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் மட்டுமே வாங்கிக் கொண்டு நடிக்கிறாராம். தனது நண்பரான அர்ஜுனுக்காக அவர் இந்த சம்பளத்தள்ளுபடியை செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments